???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  23:03:53 IST

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கும் நிலையில், அதற்கு அனுமதியளிக்க கூடாது என்று வலியுறுத்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் (மெட்ரோ மேன்) மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது-

டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதியளித்தால் இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் இதே கோரிக்கை எழும். இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அளிக்கப்படும் என்பது முட்டாள்தனமான முடிவு.

மெட்ரோ ரயில் ஊழியர்களும், அதன் தலைமை நிர்வாகியும் கூட டிக்கெட் வாங்கி சேவையை பயன்படுத்த வேண்டும். கெஜ்ரிவால் இலவச சேவையை நடைமுறைப்படுத்த விரும்பினால், பயணச் செலவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அப்படிச் செய்து இலவச சேவையை நிறுத்திக் கொள்ளலாம்.

இலவச பயணத்தை வழங்கும்போது அதில் ஊழல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இந்த திட்டத்திற்கு பிரதமர் அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு ஸ்ரீதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதரனின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ், 'இலவச பயணத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது. இலவச பயணத்திற்கான செலவு அனைத்தையும் டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும்.

டெல்லி அரசின் திட்டத்தின்  நோக்கம் என்பது, பெண்களுக்கு சலுகை வழங்குவது மட்டுமல்ல. அரசு போக்குவரத்தில் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் ஆகும். மெட்ரோவில் பெண்கள் பயணம் செய்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்' என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...