???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலியல் புகாரில் காவல் நிலையத்தில் அர்ஜுன் ஆஜர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   05 , 2018  23:08:48 IST

பாலியல் புகார் மீதான விசாரணைக்காக, நடிகர் அர்ஜுன் பெங்களூரு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
 
தமிழில் வெளியான நிபுணன் என்ற திரைப்படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரண் நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக ஸ்ருதி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண இருவரும் மறுத்த நிலையில், 5 கோடி ரூபாய் கேட்டு ஸ்ருதி மீது அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ஸ்ருதி ஹரிஹரண் பெங்களூரு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ஜூன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் விசாரணை முடிவடையும் வரை அர்ஜுனை கைது செய்ய தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினரின் சம்மனை ஏற்று பெங்களூரூவில் உள்ள கப்பன்பார்க் காவல்நிலையத்தில் அர்ஜுன் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...