???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  22:53:17 IST

125 ஆண்டு காலமாக தொடரும் காவிரி நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க விரும்புவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 
உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கர்நாடகா சாமியார் சிவக்குமாரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடக மக்களை சகோதரர்களாக எண்ணி மேகதாதுவில் அணை கட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.
 
மேலும் மேகதாதுவில் தேக்கி வைக்கப்படும் நீர் தமிழக மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குமாரசாமி கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர் 125 ஆண்டு காலமாக தொடரும் காவிரி நதிநீர் பிரச்சினையை பேசி தீர்க்க விரும்புவதாக  தெரிவித்துள்ளார். மேலும் நாம் இந்தியா பாகிஸ்தான் கிடையாது. சகோதர சகோதரிகள்தான் என்றும் உபரி நீரை சேமித்து வைக்கவே அணை கட்ட விரும்புகிறோம் என்றும் கூறினார்.  இதை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...