???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்! 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாது அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   04 , 2018  22:21:18 IST

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை 4:00 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எதற்காக தமிழக சட்டமன்றம் கூடுகிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த அணைக்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும், மத்திய அரசின் செயலைக் கண்டித்து, திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று கண்டனப் போராட்டம் நடத்தின. இதில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை 4:00 மணிக்கு கூடும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். இந்த சிறப்புக்  கூட்டத்தில், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே எந்த அணையை கட்டவும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரும் 11-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் மேகதாது அணை விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...