???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாது அணை: தமிழகம் தொடர்ந்த வழக்கு அடுத்தவாரம் விசாரணை

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  21:39:13 IST

மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக 5,912 கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்பியது. கர்நாடக அரசு அனுப்பிய அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீர் ஆணையம், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.
 
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தன. மத்திய நீர் ஆணையத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே ரூ. 5912 கோடி செலவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசிற்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் முறையிட்டார். தமிழக அரசின் கோரிக்கையைக் கேட்ட நீதிபதிகள் வழக்கினை அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...