???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   21 , 2019  23:31:48 IST

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரிக்க தமிழக அரசு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
 
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான கர்நாடக அரசின் வரைவுத் திட்ட அறிக்கையை கடந்த நவம்பர் 22-ம் தேதி ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது.
 
இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை, மத்திய நீர்வள ஆணையத்திடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 5,900 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பியதாகவும், முன் சாத்தியக்கூறு மீது மூன்று மாநிலங்களும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விரிவான அறிக்கைக்கு நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுற்றுச்சூழல் அனுமதிக்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இந்த திட்ட அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே, விரிவான அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவை கடந்த மாதம் 12-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மாத காலத்தில் பதிலளிக்குமாறு கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...