???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் - மு.க.ஸ்டாலின்.

Posted : புதன்கிழமை,   ஜுலை   05 , 2017  00:06:08 IST


Andhimazhai Image

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படும் கடும் எதிர்ப்பையும் மீறி, காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும், மின் உற்பத்தி மற்றும் நீரேற்று நிலையத் திட்டங்களை நிறைவேற்றவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்து, அதைக் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாகச் செயல் படுத்தத் துடிப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ரூபாய் 5,912 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் 25 கோடி ரூபாய் ஒதுக்கிய தொடக்க நிலையிலிருந்தே, தமிழகத்தின் சார்பில் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழக சட்டமன்றத்தில் 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய இரு தேதிகளில் “இந்த அணையை கட்டுவதோ, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோ காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரானது. ஆகவே இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசும் இத்திட்டத்திற்கான சுற்றுப்புறச்சூழல் மற்றும் இதர அனுமதிகளை அளிக்கக் கூடாது”, என்று தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வும் கர்நாடக மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆனாலும் மத்திய அரசும் இந்தப் பிரச்சினைக்கு இது வரை தீர்வு காண முயற்சிக்க வில்லை. கர்நாடக மாநில அரசும் இரு மாநில உறவுகளின் நலன் கருதி இது போன்ற தன்னிச்சையான திட்டத்தை கைவிடவும் இல்லை. மாநில அரசின் சார்பில், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் வாதிட்டு, மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்திலும் தடையுத்தரவு பெற முடிய வில்லை.

 

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தத் தீர்ப்பிற்கு அவசர அவசரமாக உச்சநீதி மன்றம் சென்று தடைபெற்ற அ.தி.மு.க. அரசு, அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் மேகதாது அணை வி‌ஷயத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி உடனடியாக தடையுத்தரவு பெற முடியவில்லை என்பது வருத்தமளிப்பது மட்டுமல்ல தமிழர்களின் விவசாய எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

 

5.2.2007 அன்று வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலேயே “தமிழகத்திற்கு இறுதித் தீர்ப்பின்படி வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறையும் வகையில் எந்தத் திட்டங்களையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது”, என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. அந்த இறுதித் தீர்ப்பை மீறும் வகையிலும், காவிரி இறுதித் தீர்ப்பின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நேரத்திலும், கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட தன்னிச்சையாக முயற்சிப்பது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற அராஜகச் செயலாகும்.

 

காவிரி இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய தண்ணீரைக் கொடுப்பதற்கே எங்களிடம் தண்ணீர் இல்லை என்று கைவிரிக்கும் கர்நாடக அரசு, 68 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புதிய அணையை கர்நாடகாவில் கட்டிக் கொள்ள முயற்சிப்பதை தமிழகம் எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது. மத்திய அரசும் இதற்கு எந்த வகையிலும் ஒப்புதல் வழங்கக்கூடாது.

 

ஆகவே, தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கும் இந்தப் பிரச்சினையில், அ.தி.மு.க. அரசு வழக்கம் போல் கடிதம் எழுதிவிட்டு, குறட்டை விட்டுத் தூங்கி விடாமல், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநிலம் கட்ட முயற்சிக்கும் அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

அந்தத் தீர்மானத்துடன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களை நசுக்கும் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...