???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  00:34:29 IST

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து சென்னையில் 4 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கை குறித்த செய்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, குஜராத் மாநில அதிகாரிகள் மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, வாக்கு எண்ணிக்கையை நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர்கள் விளக்கமளிக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒரு சேர எண்ணுவது குறித்த செய்முறை விளக்கமும் அளிக்க உள்ளனர். இந்த தேர்தலில் முதல்முறையாக ஒப்புகைச்சீட்டுகளுடன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்பிடப்படுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிறிது தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...