???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ் சினிமாவில் திரைப்பட விநியோக முறை : தேவை வெளிப்படைத்தன்மை - மீரா கதிரவன்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   04 , 2017  02:30:05 IST


Andhimazhai Image

விழித்திரு படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மீரா கதிரவன் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகச் சிக்கல்களைப்பற்றி தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

 

எனது இரண்டு படத்தை எடுத்து முடிப்பதற்குள் பத்து வருடங்கள் கடந்து போய்விட்டன. ஒரு இயக்குநர் பத்து வருடத்தில் நான்கைந்து படங்களாவது எடுத்திருப்பார். அப்படி நான் யோசிக்கும் போது உருவானதுதான் நான்கு வெவ்வேறு கதைகளை ஏன் ஒரே படத்தில் இணைக்கக் கூடாது என்று. அப்படி நினைத்து எழுதியதுதான் விழித்திரு படத்தின் திரைக்கதை.

 

எப்போதுமே ஒரு படத்திற்கு பலதரப்பட்ட பார்வையாளர்கள் உண்டு. ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள், அரசியல் படங்கள், காதல் படங்கள் என வகைக்கேற்ப பார்வையாளர்கள் உண்டு. அவர்கள் தான் ஒரு படத்தின் வணிக வெற்றியை  தீர்மானிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுடன் பொதுப் பார்வையாளர்களும் இணையும் போது  அந்தப்படம் வணிக ரீதியாக வெற்றியடைகிறது. அப்படியான பார்வையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக சினிமா இழந்து வருகிறது. படத்தை கேள்விப்பட்டு பார்வையாளர்கள் தியேட்டருக்கு வரும்போது அந்தப்படம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டிருக்கும். இதனால்  அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தான் இழப்பு அதிகம். இந்த மாதிரியான சிக்கல்களை தயாரிப்பாளர் சங்கம் கணக்கில் எடுத்துக் கொண்டதா எனத் தெரியவில்லை. ஆனால் முன்பைவிட தற்போது நிலைமை ஓரளவு சீராகியிருக்கிறது எனலாம். பிரச்சனைகளைப் பேசித்தீர்க்க ஒரு வெளிப்படைத்தன்மை முக்கியம்.

 

இப்போது ஒரு திரைப்படம் பார்வையாளர்களை ஈர்க்கவேண்டுமெனில் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகிறது. ஒன்று ரசிகர்கள் அதிகம் இருக்கும் நடிகர்கள். இரண்டாவது படத்தின் தயாரிப்பை விட அதிகமாக செலவு வைக்கும் விளம்பரம். ஒரு கோடியில் படம் எடுத்துவிட்டு ஒன்றரைக்கோடியில் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சிறு முதலீட்டுப் படத்திற்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. எனவே தரத்தில் முன்னிலையில் இருக்கும் படங்கள் வெளியீட்டில் அல்லது வெளியீட்டு முறையில் பின்தங்கி விடுகின்றன. எல்லாப்  படங்களும் பெரிய நடிகர்களை வைத்து மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற சாத்தியமும் இங்கில்லை. எனவே விநியோக முறையில் கட்டாயம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். பெரு முதலீட்டுப் படங்களுக்கு அல்லது நடிகர்களின் படங்களுக்காக சிறிய படங்கள் வெளியீடு தள்ளி வைக்கப்படுவது மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் வெளியாகும் போது நடிகர்களின் படங்கள் சில வாரங்களாவது வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும். இங்குதான் ஒரு அவசியமான வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. இந்த வெளிப்படைத் தன்மை நிலவும் போதுதான்  சினிமா ஒரு தொழிலாக ஆரோக்கியமான தொழிலாக வளர முடியும். இவையெல்லாம் நிச்சயமான தீர்வு இல்லை. என் படத்தின் வெளியீட்டு சிக்கல் எழுந்தபோது நான் யோசித்தவை. இதைப்போல இன்னும் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் இதைவிட நல்ல யோசனைகள் இருக்கலாம். அதையெல்லாம் கேட்டு தொகுத்து, தயாரிப்பாளர் சங்கமும், விநியோக மற்றும் இன்ன பிற சினிமா சங்கங்களும் பேசி  ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும்.

 

நிறைய நல்ல படங்கள் எடுக்கப்பட்டு வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. காரணம் சினிமா விநியோக முறை முற்றிலும் கெட்டுப்போய் ஊழல்மயமாகி விட்டது. அல்லது படங்கள் வெளியாவதை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகள் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். இப்போதெல்லாம் ஒரு படத்தை வெளியிடுவதை தீர்மானிப்பது தயாரிப்பாளரோ அல்லது விநியோகஸ்தரோ அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள்தான். தியேட்டர்கள் மொத்தமாக குத்தகை எடுக்கப்பட்டு படங்கள் வெளியீடு நிகழ்ந்த போது தமிழ் சினிமாவின் சிக்கல் தொடங்கியது எனலாம். அது இனி தீர்க்கப்படுமா என்று தெரியவில்லை. பெரு முதலீட்டுப்படங்கள் தொடர்ந்து தியேட்டரில் திரையிடப்பட்டன. சிறு முதலீட்டுப்படங்கள் வெளியாவதின் சிக்கல் சரியான தியேட்டர்கள் கிடைப்பதில் இருந்து அது தொடர்ந்து தியேட்டரில் இருந்து தூக்கப்படுவதுவரை தொடர்கதையாகியிருக்கிறது. ஒரு பெரிய நிறுவனத்தின் சுமாரான படம் தொடர்ந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் ஆனால் நல்ல சிறு முதலீட்டுப்படம் தியேட்டர் கிடைக்காமல் தூக்கப்பட்டுவிடும். இந்த மாதிரியான இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? ஒரு படம் நன்றாக இருந்தால் தியேட்டரில் வந்து பார்ப்பதற்கு பார்வையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நல்ல ஓபனிங் கிடைக்கும் போது படம் தியேட்டரில் ஓடாது. இந்தக் கொடுமை கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் சினிமாவின் மென்னியை இறுக்கிப்பிடித்துள்ளது. தரமான படங்கள் எடுத்தும் வணிகரீதியான வெற்றியை பெற முடியாத படங்கள் இங்கு ஏராளம். அதன் வலியை நான் ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் விழித்திரு படத்தில் அனுபவித்து விட்டேன். இந்தப் படத்தை கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் இந்த சிக்கல் நீடித்தால், இதே விநியோக முறை தொடர்ந்தால் இழப்பு தமிழ் சினிமாவுக்குத்தான்.

 

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் பேச வேண்டியிருக்கிறது. நம் அண்டை மாநிலங்களில் ஒரு திரைப்படம்  வெளியாகி மூன்று மாதங்களுக்குப்பிறகுதான் அந்தப்படத்தை நாம் இணையத்திலோ அல்லது டிவிடியாகவோ பார்க்க முடியும். ஆனால் தமிழ் நாட்டில் அடுத்த நாளே நல்ல பிரிண்ட் வந்து விடுகிறது. அண்டை மாநிலங்களில் சாத்தியப்படும் ஒரு விஷயம் எப்படி நமக்கு மட்டும் சாத்தியப்படாமல் போகிறது. எனில் தவறு எங்கே நடக்கிறது. திரைப்பட வெளியீட்டு முறை சிக்கலால் தயாரிப்பாளரைத்தவிர பிற எல்லாருமெ லாபம் பார்க்கும் சூழல்தான் இங்கே நிலவுகிறது. இது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. 

 

- எழுத்தாக்கம் : சரோ லாமா -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...