???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  01:49:16 IST


Andhimazhai Image

தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்களால் நடிகை மீரா சோப்ராவுக்கு கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. அப்படி மீரா செய்தது என்ன? தனக்கு ஜூனியர் என்டிஆரை விட நடிகர் மகேஷ்பாபுவைத்தான் அதிகம் பிடிக்கும் என்று அவர் சொன்னதுதான். இதற்குத்தான் ஜூனியர் என்டி ஆர் ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு அவரை மிரட்டி உள்ளனர்.

தமிழில் மருதமலை, அன்பே ஆருயிரே, காளை உள்ளிட்ட படங்களில் நிலா என்ற பெயரில் நடித்திருப்பவர் நடிகை மீரா சோப்ரா. இவர்  தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஆன்லைன் மூலம் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், தென்னிந்திய பட உலகில் உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார் என்று கேட்டார். அதற்கு மகேஷ்பாபு என இவர் தெரிவித்தார். இதை அடுத்து ஒருவர் தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்டிருந்தார். அதற்கு அவரை பற்றி எனக்கு தெரியாது. நான் அவரது ரசிகை கிடையாது என நிலா பதிலளித்தார்.

 

 உடனே ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து, நிலாவை வசைபாட துவங்கினர். சிலர் அவரை மிரட்டும் தொனியிலும் கருத்துகளை பதிவிட்டனர். இது பற்றி மீரா  கூறும்போது, ‘ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. சிலர் பலாத்கார மிரட்டல் விடுத்தனர். மேலும் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுவரைக்கும் என்னைத் திட்டி 30000த்துக்கு மேற்பட்ட ட்வீட்களைப் போட்டுள்ளனர். இது பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது ஜூனியர் என்டிஆரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...