???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:39:54 IST

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான 3 ஆயிரம் இடங்களும், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டுக்காக ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. மேலும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியில்  எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...