அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வராகப் பதவியேற்பார் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2022  09:02:14 IST


Andhimazhai Image

தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நேற்றைய அத்துமீறிய பேச்சுக்கும் நடத்தைக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு "உங்களுக்கு 200 ரூபாய் " என அவரை இழிவுபடுத்தி அண்ணாமலை பதிலளித்தார். "500 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்…" “ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.., 2 ஆயிரம் ரூபாய் அறிவாலயத்தில் இருந்து கிடைத்துவிடும்" என்றெல்லாம் அடுத்தடுத்து அவதூறுகளை அண்ணாமலை அள்ளி வீசியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு அறிவாலயத்தில் கையூட்டு வாங்குகிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்துவது, அநாகரிகமாக நடந்துகொள்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மாற்றத்துக்கான ஊடகத்தினர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அண்ணாமலை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த போது, அது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது போன்றவற்றை பாஜகவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
 
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகத்தினரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக அவர்கள், தங்களுடைய கடமைகளைச் செய்ய அறிவாலயத்தில் கையூட்டுப் பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை. இது போன்ற பேச்சுக்களை திரு.அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப் பார்க்கும் போக்கு. இந்தப் போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரிக அரசியலை அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று காட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
 

English Summary
Media organisations, movements oppose TN BJP Annamalai's opinion 28-05-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...