???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் 0 சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு! 0 பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு 0 ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை! 0 திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார்! 0 இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 0 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்! 0 விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் 0 ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு 0 ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் 0 தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு 0 கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்! 0 பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 0 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' 0 உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கையில் உதயன் பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல் - வைகோ கண்டனம்.

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   12 , 2013  23:48:05 IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் “ இன்று அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர்.

 

2006 ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்ரு சின்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் இரணில் விக்கிரம சின்கா அண்மையில்தான் குற்றம் சாட்டினார். நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது.

 

கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை. தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும். உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவண பவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும். இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...