???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் 0 இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு 0 ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் 0 காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம் 0 அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோடி பேச்சு! 0 அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு 0 மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்! 0 திருச்சி விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 0 காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 0 பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு 0 இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் 0 மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’ 0 ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை 0 வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச் 4ம் தேதி இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் -வைகோ

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   20 , 2013  22:43:40 IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் “உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத்தமிழர் படுகொலைக் காட்சிகள், சேனல்-4 காணொளி ஆதாரங்களோடு, ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்து கொண்டு இருக்கின்றன. 25-8-2010ல் ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர் அம்மணமாக, கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தரையில் மிதித்துத் தள்ளப்பட்டு, சிங்கள ராணுவத்தினரால் பிடறியில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் கொலைகளை சேனல்-4 வெளியிட்டது, நம் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது. 2010ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அன்று சேனல்-4 வெளியிட்ட மற்றொரு காட்சி நம் இரத்தத்தை உறைய வைத்தது. ஈழத்தங்கை இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சிதைந்து தரையில் கிடக்கும் காட்சி, நம் மனங்களை நடுங்கச் செய்தது. இப்போது நம் போற்றுதலுக்குரிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன், 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, பின்பு, அச்சின்னஞ்சிறு பாலகனையும் சுட்டுக் கொலை செய்த கொடுமை, கோடானுகோடி தமிழர்களை மனம் பதறச் செய்து, உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

 

இன்னும் நம் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சும் தமிழர் படுகொலைக் காட்சிகளை, சேனல்-4 வெளியிட இருக்கிறது. மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பவும், நீதி கேட்கவும், சிங்கள கொலைகார ராஜபக்சே அரசை கூண்டில் நிறுத்தித் தண்டிக்கக் கோரியும், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் கோரியும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்திற்கு விடியலைப் பெறவும், ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன் இலட்சக் கணக்கான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மார்ச் 4ம் தேதி மாபெரும் மக்கள் கூடல் நிகழ்ச்சியில் அறப்போர் கொடி உயர்த்தி முழங்க இருக்கிறார்கள். எனவே, வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கட்சி அடையாளங்கள், கட்சிக் கொடிகள் இன்றி, கருப்புக்கொடிகள் ஏந்தி  அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதே நாளில் தலைநகர் சென்னையில்,  இலங்கை தூதரகத்தைக் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இந்த அறப்போராட்டத்தை வீறுகொண்ட உணர்ச்சிப் போராட்டமாக நடத்திடவும், தமிழ்ப் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கிலே இதில் பங்கு ஏற்கவும் வேண்டுகிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...