???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்! 0 முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் 0 முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு 0 ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. 0 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   20 , 2018  05:50:24 IST

குஜராத் மாநிலத்தில் நரோடா பாட்டியா கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானியை விடுவித்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற பந்த் மற்றும் போராட்டத்தின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத் நகரின் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர்.  இது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்  மாயா கோட்னானிக்கு  28ஆண்டுகள் சிறை தண்டனையும், பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் இதன் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாயாபென் கோட்னானியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர். மேலும் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...