???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோலம் வரையும் போராட்டத்தை கையிலெடுத்த திமுக

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  04:51:18 IST


Andhimazhai Image
"போலீஸார் அமைதியாக இருந்திருந்தால் அந்த குழுவினர் மட்டும் நேற்று கோலம் வரைந்ததோடு போயிருக்கும். ஆனால் அரசின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் இன்று கோலங்கள் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு வாசகத்துடன் வரையப்பட்டிருக்கின்றன" என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
 
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிடும் போராட்டத்தை திமுகவினர் இன்று பரவலாக நடத்தியதே இதற்கு காரணம்.
 
சென்னை பெசண்ட் நகரில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே பலரும் கோலமிடும் போராட்டத்தை தொடங்கினர்.
 
கோலம் வரைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை சாடிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தார். இதனைத்தொடர்ந்து "கழக மகளிர் அணியினர் தங்கள் வீட்டு வாசலில் NO CAA NO NRC என்ற வாசகங்கள் அடங்கிய கோலம் போடா வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கூறினார்.
 
 
இதன்காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கோலம் வரையும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். மு.க. ஸ்டாலினின் கோபாலபுரம் இல்லம், கனிமொழி எம்.பி இல்லம் என தலைவர்களின் வீடுகளும் இன்று NO CAA NO NRC வாசகம் அடங்கிய கோலங்களுடன் காணப்பட்டது. அதுமட்டுமின்றி கோலங்களின் புகைப்படத்தை ஹாஷ்டேக்குடன் ஏராளமானோர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
 
மேலும், இந்த போராட்டத்தை முதலில் தொடங்கிய குழுவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆதரவு தெரிவித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...