செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மாஸ்டர்- விமர்சனம்
மாஸ்டர்- விமர்சனம்
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 15 , 2021 07:18:54 IST
இது விஜய் ரசிகர்களின் பொங்கல்! மாஸ்டர் படம் ஒரு கலகலப்பான காளையின் துள்ளலுடன் வந்துள்ளது. ஒன்றுக்கு இரண்டு காளைகள். விஜய் + வி.சேதுபதி!
மனோதத்துவ பேராசிரியராக வரும் ஜே.டி, மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பேராசிரியராக வருகிறார். கல்லூரியில் நடக்கும் சிறு பிரச்சனையில் மூன்று மாதங்கள் மாற்றுப்பணி அளிக்கப்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஜே.டி பணியமர்த்தப்படுகிறார். அங்கு நடக்கும் இரண்டு சிறுவர்களின் கொலையை தொடர்ந்து சிறையில் நடக்கும் தவறுகளை பற்றியும் அதற்கு பின் சிறுவர்களை வைத்து தவறான தொழில் செய்யும் பவானி பற்றியும் தெரிந்து கொள்கிறார். அதன்பின் பவானியிடம் இருந்து சிறுவர்களை ஜே.டி, மீட்டாரா என்பது தான் ‘மாஸ்டர் ’படத்தின் கதை.
படத்தின் கதை கிட்டத்தட்ட இடைவேளைக்கு பிறகு தான் ஆரம்பிக்கிறது. ஆனால், விஜய் கல்லூரியில் பேராசிரியராக வரும் காட்சிகள் விஜய் நடித்த ஜே..டி கதாபாத்திரத்தை வலுசேர்க்க மட்டுமே கோர்க்கப்பட்ட காட்சிகள் போல இருக்கிறது. மாஸ்டர் படத்தை பொறுத்தவரையில் கதாபாத்திர வடிவமைப்பிலும் சரி, திரையில் தோன்றும் நேரம் மற்றும் காட்சிகளிலும் சரி விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில், அவரை எதிர்நாயகனாக சித்தரிக்கைவில்லை என்றால் இது விஜய்சேதுபதியின் படம் என்றே சொல்லலாம். விஜய் சேதுபதி தன் அட்டகாசமான நடிப்பின் மூலம் தனித்து தெரிகிறார். சேதுவுக்கு இப்படி ஒரு பாத்திரம் அளிக்க விஜய் ஒப்புக்கொண்டதே ஆரோக்கியமான ஆச்சர்யம்!
மறுபுறம் விஜய், சமீபத்தில் வெளியான படங்களில் வந்தது போல் ஸ்டைலிஷாக இல்லாமல் கலைந்த தலை, ஆடை என ஒரு சுமாரான தோற்றத்தில் வருகிறார். இதில் அவருக்கு குடிகாரன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதற்கான காரணம் ஏன் என்று புரியவில்லை. எனினும் விஜய் வழக்கம் போல் ஆட்டம், ஆக்ஷனில் மிரட்டியுள்ளார்.
படத்தில் கதாநாயகன் வரும் காட்சிகள் நேரம் குறைவு, அதேபோல் ஜே.டி. கதாபாத்திரத்திற்காக பெரிதாக மாஸ் காட்சிகள் இல்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் நீளமும், அதற்கான மாஸ் காட்சிகளும் அதிகம். படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி அறிமுக காட்சி வருகிறது. அதற்கு பிறகு தான் விஜய்யின் அறிமுக காட்சி வருகிறது. இது வழக்கமான விஜய் படங்களுக்கான இலக்கணத்தை உடைத்து எடுக்கப்பட்ட முயற்சி.
லோகேஷ் கனகராஜ் படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்போதுமே ஒரு தரத்தில் இருக்கும். அதை இம்முறை அனிருத் தனது இசையால் மேலும் மெருகேற்றியுள்ளார்.
அதிகமான நட்சத்திர பட்டாளம் இப்படத்திற்கு ஒரு மைனஸ் என்று சொல்லலாம். ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா, ரம்யா என பலரும் முதல் பாதியில் வருகின்றனர். அவர்கள் கதாபாத்திரம் முதல் பாதியிலேயே முடிந்தும் விடுகிறது. விஜய் என்ற நடிகருக்கான மாஸ் ஃபார்முலா, லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரின் ஃபார்முலா என இரண்டுக்கும் இடையில் படம் உருவாகியுள்ளது.
சில விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருக்கலாம். ஆனாலும் நீண்ட நாள் கழித்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை ‘மாஸ்டர்’ ஏமாற்றவில்லை என்றே சொல்லவேண்டும்!
-கார்த்திக் சுந்தர்
|
|