மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
Posted : புதன்கிழமை, டிசம்பர் 22 , 2021 10:33:39 IST
நடிகர் விஜயின் உறவினரும், மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ திரைப்படங்களில் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.