???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கருணைக்கொலை செய்துகொண்ட பெல்ஜியத்தின் தங்க மங்கை!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   24 , 2019  04:17:23 IST


Andhimazhai Image

விருப்பப்படி வாழலாம் ஆனால் விருப்பப்படி வாழ்வை முடித்துகொள்ள முடியுமா?

 

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெல்ஜியம் நாட்டு வீராங்கனை தனது விருப்பப்படி வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமான கருணைக்கொலை வழிமுறை மூலம் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

 

பெல்ஜியத்தை சேர்ந்தவர் மார்க்கி வெர்வூர்ட். 40 வயதாகும் இவர்  2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ’வீல் சேர் ரேசிஸ்’ தங்கம் வென்றார். இதுபோன்று வரலாற்று சாதனையை படைத்த இவர் 2008 ஆம் ஆண்டு கருணைக் கொலை செய்துகொள்ளும் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். பெல்ஜியத்தில் விருப்பத்துடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள கருணைக்கொலை வழிகளை மேற்கொள்ள அனுமதி உள்ளது.

வெகு சிலரை மட்டுமே பாதிக்கும் முதுகெலும்பு சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வலியுடன் வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

 

2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இவர்  ‘ இதுதான் எனது கடைசிப் போட்டி. என்னைபொறுத்தவரை  கருணைக்கொலையை எல்லா நாடுகளுக்கும் அனுமதிக்க வேண்டும். கருணைக்கொலை என்பது கொலையல்ல. இதற்கு மேலும் என்னால் இந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் இந்த முடிவு. அடுத்து என்ன செய்வது என்று நான் மிகவும் பயந்தேன். ஆனால் இந்த கருணைக்கொலைக்கான கோப்புகள்தான் சிறு நிம்மதி அளித்தது. இனி ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வேன்’ என்று கூறி இருந்தார். இப்போது அவர் விருப்பப்படி வாழ்வை முடித்துக்கொண்டார்.

 

இவரது மரணம் பெல்ஜியம் நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பெல்ஜியத்தின் மன்னர் குடும்பத்தினர் இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது செல்லபெயரை அந்த ட்வீடில் பதிவிட்டுள்ளனர்.

 

வடக்கு பெல்ஜியத்தில் உள்ள டையஸ் என்ற நகரத்தில்தான் இவர் பிறந்துள்ளார். இப்பகுதியை சேர்ந்த மக்கள் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊரில் வசித்து வரும் கரைஸ்டெயின் நைஸ் என்ற கவிஞர் இவரது மறைவுக்கு தனது கவிதைகளால் இறங்கல் தெரிவித்தார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...