???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மணி சங்கர் அய்யர் - ஒரு முக்கிய குறிப்பு!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   09 , 2017  00:57:34 IST


Andhimazhai Image
மணி சங்கர் அய்யர். அவர் பெயரில் அய்யர் என இருப்பதைக் குறித்து அவரை மதிப்பிட வேண்டாம். தான் மாட்டுக்கறி சாப்பிடுபவன் எனச் சொல்லி சர்ச்சைக்குள்ளானவர் அவர். அவரது மனைவி ஒரு சீக்கியர்.
 
 
மணி சங்கர் அய்யரின் சகோதரரும் பொருளாதார நிபுணரும் பத்தி எழுத்தாளருமான சுவாமிநாதன் அங்கிலசேரிய அய்யரின் பதிவு ஒன்றை நான் மொழி பெயர்த்துப் பதிந்திருந்தேன். அதன் ஒரு பகுதி வருமாறு: "என் அம்மா சற்றுக் கசப்போடு ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. 'மதர் இன்டியா என்கிற சொல்லுக்கு வேறு யாரைக் காட்டிலும் நான்தான் அதிகம் பொருத்தமானவள்' என்றார் அவர். ஏன் தெரியுமா?அவளது மூத்த மகன் மணி சங்கர் ஒரு சீக்கியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். நான் இரண்டாவது மகன் ஒரு பார்சியை திருமணம் செய்து கொண்டேன். எல்லோருக்கும் இளையவன் முகுந்தன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். மகள் தாரா ஒரு இந்துவைத் திருமணம் செய்து கொண்டாள். அம்மாவின் சகோதரி டாக்டர் அலங்காரம் ஒருமுஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டாள். அம்மா பக்தி நிறைந்த ஒரு இந்துப் பெண். கடைசி இரண்டு ஆண்டுகளில் சன்யாசம் மேற்கொண்டு ரிஷிகேசத்தில் சிவானந்த ஆச்ரமத்தில் கழித்தாள். எந்த RSS திரு உருவையும் விட 'பாரதமாதா’ என அழைக்க அவள் அதிகத் தகுதியானவள். அவளுக்கு மரியாதை செய்யும் முகமாக (வேண்டுமானால்) நான் 'மதர் இன்டியா கி ஜே', 'பாரத் மாதா கி ஜே' எனச் சொல்வேன்..."
 
 
ஸ்வாமிநாதன் அங்கிலசேரிய அய்யர் என்பதில் உள்ள இந்த 'அங்கிலசேரிய' என்பது அவரது பார்சி மனைவியின் பெயர். மனைவியர் மட்டுந்தான் கணவர் பெயரைத் தம் பெயரோடு இணத்துக் கொள்ள வேண்டுமா, நான் என் மனைவியின் பெயரை வைத்துக் கொள்கிறேன் என இணைத்துக் கொண்டவர் இவர் என்பதையும் எங்கோ படித்துள்ளேன்..
 
 
"பாரத் மாதாகி ஜே" - என எல்லோரும் சொல்ல வேண்டும் என பரிவாரங்கள் சொன்னபோது அதைக் கண்டித்தார் சுவாமிநாதன். அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தது.  மணி சங்கர் அய்யரும் கூட தன் பெயரில் அய்யர் என வைத்துக் கொண்டாலும் சாதி, மதங்களை மீறித் திருமணம் செய்துகொண்டவர் என்பதோடு தான் மாட்டுக்கறி சாப்பிடுவதைச் சொல்லி சர்ச்சைக்குள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
மணிசங்கர் அய்யரின் குடும்பம் ஒரு வித்தியாசமான, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஒன்று. மோடி வகையறா அவர் மீது கொண்ட ஆத்திரத்திற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணம். உறுதியாக மணி சங்கர் சாதி அடிப்படையில் 'நீசன்" என்கிற சொல்லைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்.
 
 
- அ. மார்க்ஸ், தனது முகநூல் பக்கத்தில் எழுதியது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...