அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மண்டேலா: திரை விமர்சனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   04 , 2021  17:53:22 IST


Andhimazhai Image

திரும்பும் பக்கம் எங்கும் அரசியல் கட்சிகளின் சுயவிளம்பரங்கள் மக்களைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சாதி - அதிகாரம் - தேர்தல் போன்றவற்றைக் கலகலப்பாக கிண்டல் செய்து செல்கிறது யோகி பாபுவின் நடிப்பில் வெளியாகியுள்ள மண்டேலா திரைப்படம்.

 

பொட்டல் காடாய் காட்சியளிக்கும் ஊராட்சி சூரங்குடி. சாதிப் பெருமை பேசித்திரியும் மனிதர்களுக்கு மத்தியில், ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சங்கிலி முருகன். வடக்கூர் மற்றும் தெக்கூர் என இரண்டு ஊர்களிலிருந்து இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருப்பவ்ர், கிராமத்தின் ஒற்றுமை வளர்ப்பதற்காக.

இப்படிச் செல்லும் கதையில், ஒரு கட்டத்தில் புதியதாக வாக்காளர் அடையாள அட்டை வாங்கும் சலூன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவின் ஓட்டுக்கு  முக்கியத்துவம் பிறக்கிறது.. இதை வைத்து  கலகலப்பாக படத்தை எடுத்துள்ளார்  இயக்குநர் மடோனி அஸ்வின்.

 

இளிச்சவாயனாக கிராமத்தில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் யோகி பாபுவை, நெல்சன் மண்டேலாவாக மாற்றும் ஷீலா ராஜ்குமாரின் எதார்த்தமான நடிப்பு பாராட்ட வைக்கிறது. யோகிபாபுவின் உதவியாளராக வரும் முகேஷின் நடிப்பு அபாரம். படத்தில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.




பொட்டல்காடாய் காட்சியளிக்கும் கிராமத்தை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வித்யு அய்யன்னா. அதேபோல் கலை இயக்குநர் ராமு தங்கராஜ், எடிட்டர் பிலோமினும் மண்டேலா திரைப்படம் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணமானவர்கள் எனலாம்.

 

யுகபாரதியின் வரியில் ‘ஒரு நீதி ஒன்பது சாதி’ பாடலும், தெருக்குரல் அறிவு வரியில் ’யெலா யெலோ’, ’ஏலே மண்டேலா’  என்ற பாடலும் காத்திரமான அரசியல் மற்றும் மண்வாசனை வீசும் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றன. வரிகளுக்கு ஏற்ற இசையைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் பரத் சங்கர் பின்னணி  இசையில் பின்னி எடுத்திருக்கிறார்.  

 

வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தைச் சாதாரண மக்களும் புரியும் வகையில் எடுத்துக்கூறி ஒரு கலகலப்பான அரசியல் சினிமாவை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மடோனி அஸ்வின்.
தேவையான காலத்தில் வந்துள்ள படம்!

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...