???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்கள் நீதி மய்யம்! கட்சிப்பெயரை அறிவித்தார் கமல்! 0 நீரவ் மோடி பண மோசடி குறித்தான பொதுநல வழக்கு இன்று விசாரணை 0 வங்கிகள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது: மம்தா பானர்ஜி 0 கமல் அரசியல் பிரவேசம்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து 0 கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு- திருச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 0 கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் விஷப் பரீட்சையில்தான் முடியும் – வைகைச்செல்வன் 0 அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன் 0 நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகளும் பங்கேற்பு 0 ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்: ஓபிஎஸ், இ.பி.எஸ் அறிவிப்பு 0 செய்தியாளர்கள் சந்திப்பில் மீனவ பிரதிநிதிகளை மேடை ஏற்றிய கமல் 0 காகிதப் பூக்கள் மலராது: மு.க.ஸ்டாலின் 0 கோச்சடையான் பட வழக்கு: லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு 0 வருமானத்தை மக்களுக்கு பிரித்துக்கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு! 0 முதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு 0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதன் கூறுவது அனைத்தும் பொய்: பாரிவேந்தர்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   31 , 2016  23:16:03 IST

வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் இ‌டம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மதன் மோசடி செய்திருப்பதாக கூ‌றியுள்ளார். ‌வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மதன் ஏற்கனவே பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பதை பாரிவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மதன் நீக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது கடிதம் திட்டமிட்ட மிரட்டல் நாடகம் என்பதால், அதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்திருப்பதாகவும் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார். தன்னிச்சையாக மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், தங்களது நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும்‌ இல்லை என்று பாரிவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...