அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாநாடு: திரைப்பட விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   27 , 2021  00:55:41 IST


Andhimazhai Image

டைம் லூப்பில் சிக்கியிருக்கும் கதாநாயகன்  மாநிலத்தின் முதலமைச்சரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் சாகசமே மாநாடு திரைப்படம்.

துபாயில் பணியாற்றும் கதாநாயகன் அப்துல் காலிக் (சிம்பு) நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு விமானத்தில் வருகிறான். திருமணம் செய்யப்போகும் பெண்ணையும் அவளைக் காதலித்த தன் நண்பனையும் (பிரேம்ஜி) சேர்த்துவைப்பதுதான் காலிக்கின் திட்டம்.

திட்டமிட்டபடி திருமணப் பெண்ணைக் கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்துவைக்கப் போகும்போது, எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடக்கிறது.

அதில் ஏற்படும் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலமைச்சரை (எஸ்.ஏ.சந்திரசேகர்) கொல்ல வேண்டுமெனக் காலிக்கை கட்டாயப்படுத்துகிறார் காவல்துறை உயர் அதிகாரியான தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா).

வேறுவழியில்லாமல் முதலமைச்சரைக் காலிக் கொல்ல, அவனைக் காவல் துறை கொன்றுவிடுகிறது. திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், காலிக் விமானத்தில் இருக்கிறான். அப்போது தான் காலிக்குக்கு தெரிகிறது தான் டைம் லூப்பில் சிக்கியிருப்பது.

முதலமைச்சரை எதற்காகச் சுடுகிறார்கள், யார் சுடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, டைம் லூப்பிலிருந்து தானும் தப்பிக்க வேண்டும், முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காலிக் மேற்கொள்ளும் சாகசங்களே படத்தின் மீதி கதை.

நமக்குப் புதுமையான கதை. ஹாலிவுட்டிலும் பிற இடங்களிலும் பழசு. இதை சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

இடைவேளைக்குப் பிறகு சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யா தோன்றும் காட்சிகள் படத்தில் அனல் பறக்கிறது.

சிம்புவின் நடிப்பில் கொஞ்சம் தொய்விருப்பது போல் தெரிந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பால் அது காணாமல் போகிறது.

கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு வழக்கமான நாயகி பாத்திரம் தான். ஒய்.ஜி. மகேந்திரன் தவிர எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், கருணாகரன், ப்ரேம்ஜி அமரன், அஞ்சனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா என பலரும் உள்ளனர்.

படத்தில் ஒரு பாடல் தான் என்றாலும், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. படத்தின் விறுவிறுப்பிற்குப் பின்னணி இசையும் வலுசேர்த்திருக்கிறது.

படத்திற்குத் திரைக்கதை எந்தளவிற்குப் பெரிய பலமோ, அதேபோல்  கே.எல். பிரவீணுடைய படத்தொகுப்பும் பெரிய பலமே. கொஞ்சம் பிசகினாலும் படம் புரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு பிரமாதம். மாநாட்டுக் காட்சிகளை யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் வசனங்கள் சமகால அரசியலைப் பிரதிபலிப்பதாக இருந்தது. இந்தி திணிப்பு, ஜெயலலிதா மரணம், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி, கோவை குண்டு வெடிப்பு, வாரிசு அரசியல் என பல்வேறு விஷயங்கள் அசால்டாக கையாண்டிருக்கிறார்கள்.

படத்தின் டைட்டில் கார்டில் வருவது போல், வெங்கட் பிரபு தனது அரசியலை சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

 

பிரகாஷ்
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...