???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமெரிக்கா செல்வதற்காக எண்பது வயது தாத்தா வேடம் போட்டவருக்கு நேர்ந்த விபரீதம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  09:10:08 IST


Andhimazhai Image
வெளிநாடு சென்று நல்ல வேலையில் நன்றாக சம்பாதித்து முன்னேற வேண்டுமென்கிற ஆவல் இந்தியாவில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு உண்டு. அதற்காக கடின உழைப்பையும், முயற்சியும் செலுத்தி வெற்றிபெற்றவர்கள் இருக்கையில், குறுக்கு வழியில் அமெரிக்க செல்ல நினைத்த ஒருவருக்கு நேர்ந்த நிலை விபரீதத்தில் முடிந்திருக்கிறது.
 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயேஷ் படேலுக்கு அமெரிக்க சென்று வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்பது ஆசை. எலெக்டிரிஷியன் வேலை செய்துவந்த ஜெயேஷ் படேலின் பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர் அமெரிக்கா சென்று இப்போது நன்றாக சம்பாதிக்கிறார். அவர் மூலம் முகவரை அனுகிய ஜெயேஷ் படேலுக்கு, எளிமையாக அமெரிக்கா செல்ல அந்த முகவர் ஒரு வித்தியாசமான யோசனையை வழங்கியிருக்கிறார்.
 
வயதானவர்களுக்கு எளிமையாக விசா கிடைக்குமென்ற முகவரின் யோசனையின்படி 32 வயது ஜெயேஷ் படேல் 81 வயது தாத்தாவாக அவதாரம் எடுத்தார். இதற்காக அந்த முகவரே ஜெயேஷ் படேலுக்கு ஒரு ஒப்பனையாளரை ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டார். ஜெயேஷ் படேலின் ஆவணங்களும் போலியாக மாற்றப்பட்டு, கடந்த திங்கட்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நம்பிக்கையுடன் வந்தவருக்கு அப்போதுதான் வந்தது கெட்ட நேரம்.
 
நமது ஜெயேஷ் படேல் 81 வயது அம்ரித் சிங்காக மாறி தலைப்பாகையுடன் சக்கர நாற்காலி வயோதிக கோலத்தில் அமர்ந்திருந்தார். பார்க்க வித்தியாசமாக தெரிந்த அம்ரித் சிங்காக மாறிய ஜெயேஷ் படேலை பார்த்தவுடன் காவலர்களுக்கு சந்தேகம்... அங்குதான் இந்த மேக் அப் மேனின் முட்டாள்தனம் ஜெயேஷ் படேலுக்கு வினையாக வந்தது. தலையிலும், தாடியிலும் நரை முடி வைத்த மேக் அப் மேன், கைகளில் இருந்த கருத்த இளம் முடியை மறந்துவிட்டார். வயோதிக தோற்றத்துடனும், அதற்கு முரணான விதத்திலும் இருந்த ஜெயேஷ் படேலை காவலர்கள் பிடித்து காவல்நிலையத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு சம்பவங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது. கைது செய்யப்பட்ட ஜெயேஷ் படேல் இப்போது அந்த முகவர், மேக் அப் மேனுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். அமெரிக்கா செல்ல நினைத்தவருக்கு ஜெயிலுக்கு போகும் விபரிதம் நேர்ந்தது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...