???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரசாதத்தில் விஷம் கலந்து பேராசிரியரை கொன்ற அரசு ஊழியர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   25 , 2019  07:52:45 IST


Andhimazhai Image

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்காக சென்னையில் பேராசிரியர் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்ட பேராசிரியரின் மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி (35) பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சரண்யா (30) என்கிற மனைவி இருக்கிறார். அரசு கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்குவதற்காக எம்.கே.பி நகரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரிடம் கார்த்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரூ 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை கிடைக்காததால், வேலாயுதத்திடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்திருக்கிறார் கார்த்தி.

 

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முல்லைநகர் பேருந்து நிலையத்தில் வேலாயுதத்திடம் கொடுத்த பணத்தை கார்த்தி கேட்டதாக தெரிகிறது. அப்போது அவரது மனைவி சரண்யாவும் உடன் இருந்தார். அப்போது அவர்களை ஏமாற்றி விஷம் கலந்த கோயில் பிரசாதத்தை கொடுத்திருக்கிறார் வேலாயுதம். அதை சாப்பிட்ட கணவன் மனைவி இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் இதில் கார்த்தி உயிரிழந்தார். சரண்யா உயிருக்கு போராடி வருவதாக கூறப்பட்டிருக்கிறது. போலீஸ் விசாரணையில் வேலாயுதம் செய்த கொடூர காரியம் வெளிவந்திருக்கிறது. அரசின் உணவு பாதுகாப்பு கழகத்தில் பணியாற்றிவந்த வேலாயுதம், திட்டம் வகுத்து சல்ஃபியுரிக் ஆசிட் அமிலத்தை கொடுத்து இந்த கொலையை செய்திருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...