???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன்? பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா?: ராமதாஸ் குற்றச்சாட்டு 0 எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் 0 நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது! 0 எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 0 தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் 0 ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் 0 தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா 0 பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள்! 0 பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்! 0 நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் 0 பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் 0 பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு 0 லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர்! 0 மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் 0 வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘ஓல்ட் மாங்க்’ உரிமையாளர் மரணம்! மதுப்பிரியர்கள் சோகம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   09 , 2018  05:55:59 IST


Andhimazhai Image

 

 

எவ்வளவு உயர்ரக மது வகைகள்  இருந்தாலும் ஒல்ட் மாங்க் என்றால் அதற்காக உயிரை விடும் மனிதர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த புகழ்பெற்ற ஓல்ட் மாங்க் சரக்கு 1954-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை அறிமுகப்படுத்திய தொழிலதிபர் கபில் மோகன் ஜனவரி 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88.

ஓல்ட் மாங்க், கோல்டன் ஈகிள், சோலன் நம்பர் 1 ஆகிய பிராண்டுகளை மதுப்பிரியர்களுக்கு அறிமுகம் செய்வித்தது இவரது நிறுவனமான மோகன் மீக்கின்.

2000 ஆண்டுகளின் நடுப்பகுதி வரை ஓல்ட் மாங்க் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையான ரம். அவரது கோல்டன் ஈகிள் பீர், கிங் பிஷர் பீருக்கு முன்னால் தாக்குப்பிடிக்கவில்லை. ஆனால் ஓல்ட் மாங்க் எல்லாவற்றையும் சமாளித்தது.

“நாங்கள் எக்காரணம் முன்னிட்டும் விளம்பரமே செய்யமாட்டோம்” என்று கபில் மோகன் 2012-ல் ஒரு பேட்டியில் கூறினார். விளம்பரம் செய்யக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார்.

ஓல்ட் மாங்குக்கு விளம்பரம் காசு கொடுத்து செய்யவேண்டிய தேவை இல்லை. அதன் வாடிக்கையாளர்களே அதை விட்டுப் பிரியமாட்டார்கள் என்பதை இன்றைக்கும் மதுக்கூடங்களுக்குச் செல்பவர்கள் பார்க்கலாம்.

ஓல்ட் மாங்க் சரக்கின் சுவைக்குக் காரணம் ஹிமாசலப்பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள ஒரு ஊற்றில் எடுக்கும் நீர்தானாம். அதை எக்காரணம் முன்னிட்டும் மாற்ற கபில் மோகன் விரும்பவில்லை.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு குடும்ப வாரிசுகளிடையே பிரிவினை ஏற்பட்டது. பின்னர் நிறுவனம் மெல்ல சரிவுக்குள்ளானது.

ஓல்ட் மாங்க் என்ற சரக்கை ஊருக்கே அளித்து மகிழ்ந்த கபில் மோகனுக்கு சரக்கு வாசனையே ஆகாது! ஆமாம் அவருக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை!


English Summary
Man behind old monk dies

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...