???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வங்கிகள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது: மம்தா பானர்ஜி

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   21 , 2018  00:58:29 IST

வங்கிகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க அரசாங்கம் சீர்குலைத்துவிட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ’’மக்கள் தங்கள் பணத்தைச் சேமித்து வைக்கும் நம்பிக்கைக்குரிய இடமாக பொதுத்துறை வங்கிகள் இருந்தன. ஆனால் மக்களின் சேமிப்புப் பணத்தை எடுத்து வேறு செயல்களுக்குப் பயன்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க அரசு சீர்குலைத்துவிட்டது.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவை தீவிரமாக விமர்சித்துவரும் பிரதான எதிர்க்கட்சியாக திரிணமூல் கட்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...