???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாமாங்கம்: திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   13 , 2019  04:09:57 IST


Andhimazhai Image

மம்மூட்டி நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மாமாங்கம். 45 கோடி பொருட் செலவில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.  18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாமாங்கம் என்ற பிரம்மாண்ட விழாவை சமோரியர்கள் நடத்துகிறார்கள். அந்த விழாவின்போது சமோரிய அரசரை வீழ்த்தி தங்களது அதிகாரத்தை நிலைநாட்ட வள்ளுவகோனதிரி நாட்டை சேர்ந்தவர்கள் தற்கொலைப்படைகளை மூன்று தலைமுறைகளாக அனுப்புகிறார்கள். எல்லா முறையும் வள்ளுவகோனதிரி நாட்டின் தற்கொலை படைகள் தோல்வியை தழுவுகிறார்கள்.

 

இறுதியில் சந்த்ரூத் குடும்பத்தை சேர்ந்த உன்னிமுகுந்தும் அவனின் அக்கா மகனும் சமோரியர்களை வீழ்த்த புறப்படுகிறார்கள். அவர்கள் சமோரியர்களை வீழ்த்தினார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

 

மம்மூட்டி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் திரைப்படம் மாமாங்கம். சரித்திரப் படங்கள் என்றாலே வீர தீர மன்னர்களின் வெற்றியை கொண்டாடும் கதைகளைப்போல் வள்ளுவகோனதிரி நாட்டின் பெருமைகளை படம் பேசுகிறது. சமோரியர்கள் வீழ்த்த வேகத்துடன் கிளம்பும் மம்மூட்டிக்கு  எதற்கு போர் புரிய வேண்டும் என்ற கேள்வி தோன்றுகிறது.  குலப்பெருமைகளை காப்பாற்ற ராஜ வம்சத்தின் சந்ததிகளை காவு கொடுப்பது நியாயமற்ற செயல்  என்பதை வள்ளுவகோனதிரி நாட்டை சேர்ந்தவர்களுக்கு உணர்த்த விரும்புகிறார்.

 

சமாதானம் சமாதானம் என்று மம்மூட்டி பேசினாலும் வள்ளுவகோனதிரி நாட்டினருக்குதான் கட்டுக்கடங்காத வீரம் இருக்கிறது என்பதை பக்கம் பக்கமாக பேசும் வசனங்களில் உணர்த்திவிடுகிறார்.

 

சந்த்ரூத் குடும்பத்தை சேர்ந்த உன்னிமுகுந்திடம் தோள் சீலையணியாத பெண் ஒருவர் பேசுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அக்காலக் கட்டத்தின்  சாதியப் படிநிலையை அசலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

 

பாகுபலி படத்தில் ஒரு பாறையை அசால்ட்டாக கதாநாயகன் தூக்குவதைபோல் எந்த காட்சிகளும் படத்தில் இல்லாவிட்டாலும்கூட , மம்மூட்டி ஓங்கி அடிக்க பாய்ந்து வரும் குதிரைகள் குப்புற விழுகின்றன. மன்னர்கள் அல்லவா.. வீர சாகசங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்...

 

லட்ச கணக்கான படை வீரர்கள், பிரம்மாண்ட  யுத்த கள காட்சிகள் என்று மிகைப்படுத்தாமல் எதார்த்தமாக யுத்த காட்சிகளை காட்டியிருப்பது பாராட்டிற்குரிய விஷயம்.  இனியாவும், பிராட்சி தேக்லனும் கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

’எங்கே என் மூக்குத்தி’ பாடல் முழுவதும் கவர்ச்சி வழிந்தோடுகிறது. கதை சொல்லும் முறை வலுவாக இல்லை. படத்திற்கு பாதியில் சற்று தூக்கம் கூட வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில்  ஜவ்வாக படம் இழுக்கிறது என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

 

ஆனால் மம்மூட்டி ரசிகர்களின் ஆரவாரமும் உத்வேகமும் நம்மை தேற்றி படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கும்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...