???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயித்தவர்களுக்கு விடுமுறை கிடையாது: மஹாதிர் முஹம்மது!

Posted : வியாழக்கிழமை,   மே   10 , 2018  04:59:19 IST


Andhimazhai Image

மலேசியத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 92 வயதான எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர் மஹாதிர் முஹம்மதுவிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டிய போது அவர் சொன்ன வாசகம்: ‘’ஆமாம் நான் இருக்கிறேன். இன்னும் இருக்கிறேன். மேலும் அவர் சொன்னார், உங்களுக்கு இரண்டு நாள் தேசிய விடுமுறை கிடைக்கும். ஆனால் ஜெயித்தவர்களுக்கு விடுமுறை கிடையாது.’’

 

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பரிசான் தேசிய கூட்டணிக்கும் மஹாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று காலை தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் மலேசியாவில் உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதனைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மஹாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் மஹாதிர் முகமதுவின் எதிர்க்கட்சிக் கூட்டணி 115 இடங்களைப் பிடித்துள்ளது. இதன் மூலம் மலேசியா வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியினர் ஆட்சி அமைக்க உள்ளனர்.

 

உலகின் மிக வயதான பிரதமர் என்னும் பெருமையைப் பெறுகிறார் 92 வயதான மஹாதிர் முஹம்மது. 1925ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கிய இவர் பின்னாளில் மருத்துவக் கல்வி படித்தார். மஹாதிர் முஹம்மது அரசியலுக்கு வந்து ஏறத்தாழ எழுபது வருடங்கள் ஆகின்றன. ஒருங்கிணைந்த மலாய தேசியக் கட்சியில் 1946 ஆம் ஆண்டு அவர் இணைந்தார். ப்ரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்றப் போராடிய கட்சி இது. பின்னர் 1964ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படார். மஹாதிர் முஹம்மது நீண்ட காலம் மலேசியப் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். 1981 ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை [பரிசான் நேஷ்னல் கட்சி] மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். மலேசியாவின் நவீன முகம் என்று மஹாதிர் முஹம்மதுவை தாராளமாகச் சொல்லலாம். மலேசியாவின் உள்நாட்டு கட்டமைப்புகளை நவீனப்படுத்தியவர். மலேசியா பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளில் முன்னுதாரணமாகத் திகழக் காரணமானவர். ஐந்து முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்றவர். மலேசியாவின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக உருவெடுத்த மஹாதீர் முஹம்மது கடந்த 2003ஆம் ஆண்டு பதவி விலகி பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

இவருக்குப் பின் மலேசியப் பிரதமரானவர் அப்துல்லா அஹ்மத் பத்வய். அதன் பிறகு 2009ஆம் ஆண்டிலிருந்து 2018 வரை முஹம்மது நஜீப் பிரதமராகப் பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மலேசிய வளர்ச்சிப் பாதையில் பயணித்தாலும் அதே அளவு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கினார். இவரது தலைமையிலான அரசு நிறுவனம் மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு வெடித்தது. இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு தனது அரசியல் ஓய்வைத் திரும்பப் பெற்ற மஹாதீர் முஹம்மது ஒருங்கிணைந்த மலாய தேசியக் கட்சியில் இருந்து விலகி பெர்ஸாது என்ற கட்சியை ஆரம்பித்தார். தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் [பக்கதான் ஹரப்பான்] கூட்டணி அமைத்தார். இரண்டு வருடத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் இந்த 92 வயது சிங்கம். இதன்மூலம் மலேசியாவில் 61 ஆண்டுகால பரிசான் நேஷ்னல் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. மலேசிய மக்களின் முடிவை மதிப்பதாக அறிவித்துள்ளார் தேர்தலில் தோல்வியடைந்த பிரதமர் முஹம்மது நஜீப்.

 

- சரோ லாமாclick here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...