???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   28 , 2018  00:46:14 IST

AMMA என்று சுருக்கமாக அழைக்கப்படும் அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட்ஸ் என்ற மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகந்தாஸ் மற்றும் பாவனா ஆகியோர் திடீரென விலகியுள்ளனர். 
 
நடிகர் திலீப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் அவசரமாகக் கூடிய மலையாள நடிகர்கள் சங்கமான AMMA, பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது. அதில் இருந்து அவர் AMMAவின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. 
 
இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்துள்ள நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இதனைத்தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமானது குற்றவாளியை பாதுகாக்க முயல்வதாகக் கூறி இனியும் அந்த சங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று பாலியல் வன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கிய அந்த மூத்த நடிகை AMMA-வில் இருந்து முதல் ஆளாக விலகியுள்ளார்.
 
அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட 3 நடிகைகளும் AMMA-வில் இருந்து விலகியுள்ளனர். சங்கத்தில் ஆண்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரீமா கல்லிங்கல், இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் சங்கத்தில் இருந்து விலகவில்லை என்றும் தங்கள் துறைகளில் பணிபுரியும் அடுத்த தலைமுறை பெண்கள், சுயமரியாதையுடனும், எந்தவித சமரசங்களும் இன்றி பணியாற்ற வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் இவ்வாறு செய்ததாக் குறிப்பிட்டுள்ளார்.
 
மலையாள திரையுலகம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...