???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கணிசமான வாக்குகளுடன் பல இடங்களில் மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மய்யம்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   24 , 2019  04:26:27 IST


Andhimazhai Image

கட்சி தொடங்கப்பட்ட ஒராண்டில் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலில் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருக்கிறது.15 லட்சத்தி 75 ஆயிரத்தி 324 வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.94 சதவிகிதமாகும். 

தமிழகம் - புதுவையில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம், 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசனின் அடையாளத்தோடு இதன் வேட்பாளர்கள் மக்களை சந்தித்தனர். தொலைக்காட்சி விளபம்பரங்கள், சமூக வலைத்தள பிரசாரம் மூலம் நகர்புற இளைய தலைமுறையினர் மத்தியில் கணிசமான அங்கீகாரத்தை பெற்ற மக்கள் நீதி மய்யம், தனது முதல் தேர்தலில் அதற்குரிய பலனை பெற்றிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகள், தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் கணிசமான வாக்குகளுடன் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மற்ற இடங்களில் நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சிகளிடையே போட்டியிட்டிருக்கிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இன்று காலை சென்னையில் தமது வேட்பாளர்களோடு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது பேசிய அவர், "தேர்தல் முடிவுகளால் துவண்டுவிடவில்லை, உற்சாகத்துடன் அடுத்தடுத்து களப்பணியாற்றுவோம். இத்தேர்தல் எமக்கு ஒரு ஒத்திகையாக இருந்தது. பிறந்து 14 மாதங்களே ஆன குழந்தையை வாரி அனைத்து ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் வருங்கால வெற்றியாளர்கள். வெற்றிப்பெற்ற கட்சியினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.


English Summary
Makkal needhi maiyam get third place in several constituency

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...