செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் பதவியை விட்டு விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று தனது முடிவை அறிவிப்பேன் என மகிந்த ராஜபக்சே பதிலளித்திருந்த நிலையில், இன்று காலை போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பல இடங்களில் வன்முறை வெடித்து, நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.