அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மஹா: திரைவிமர்சனம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   23 , 2022  11:17:16 IST


Andhimazhai Image

பெண் குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லும் வில்லனும், அவனிடமிருந்து தன் குழந்தையை மீட்கப்போராடும் தாயும் சந்திக்கும் புள்ளியே 'மஹா' திரைப்படம்.

விமான ஓட்டியான  மாலிக்கும்(சிம்பு) விமானப் பணிப் பெண்ணான  ஜான்- மஹாவும் (ஹன்சிகா) லிவிங் டுகெதரில் வாழ்ந்து வர, விமான விபத்தில்  மாலிக் இறந்து விடுகிறார். கர்ப்பமாக இருக்கும் ஹன்சிகா தன்னந்தனியாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, வளர்த்து படிக்க வைக்கிறார். ஒரு நாள், பள்ளிக்குச் சென்ற ஹன்சிகாவின் குழந்தை காணாமல் போகிறார். இதே போல் நிறையக் குழந்தைகள் காணாமல் போக காவல்துறைக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரியான ஶ்ரீகாந்த் குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தடுமாறுகிறார். வழக்கு விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவர, ஹன்சிகா தன் குழந்தையைக் காப்பாற்றினாரா? இல்லையா? குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கொலைகாரனைக் காவல் துறை கைது செய்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராட்சசன் படம் போன்று சைக்கோ த்ரில்லராக வந்திருக்க வேண்டிய மஹா, மேம்போக்கான திரைக்கதை உருவாக்கத்தால் அலுப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங்.

ஹன்சிகாவின் ஐம்பதாவது படத்தை இயக்க வாய்ப்பை பெற்ற இயக்குநர் யூ.ஆர்.ஜமீல், இன்னும் கொஞ்சம் திறம்பட உழைத்திருக்கலாம்.

ஹன்சிகா, சிம்பு, ஶ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், தங்கதுரை என பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் எந்த கதாபாத்திர உருவாக்கமும் வலுவாக இல்லை. சுஜித் ஷங்கரின் வில்லத்தனமான நடிப்பு மட்டும் கொஞ்சம் ஆறுதலை தருகிறது. 'நாம யாரை விட்டுட்டுப் போனோம், அவங்க தான் விட்டுட்டுப்போனாங்க' என சிம்பு தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் காட்சிகளில் அரங்கில் விசில் பறக்கிறது.

சைக்கோ கொலையாளியைக் காட்டும் காட்சியில் மிரட்டிய ஜிப்ரானின் பின்னணி இசை, பாடல்களில் ஏனோ சோபிக்கவில்லை.

ஹன்சிகாவின் ஐம்பதாவது திரைப்படம், முதல் முறையாக அவர் அம்மாவாக நடித்த திரைப்படம், நீண்ட  இழுபறிக்கு பிறகு வெளிவந்திருக்கும் திரைப்படம் என்பதுதான் படத்தின் சிறப்பே.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...