???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திசை மாறுகிறது ‘மஹா’ புயல்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  22:08:24 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரம் புயல் உருவானது. ‘மஹா’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு வடமேற்கில் நகர்ந்து ஓமன் கடற்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த புயல் நேற்று காலையில் டையூவில் இருந்து தென்மேற்கே 580 கி.மீ. தொலைவிலும், வெரவலில் இருந்து 550 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டு இருந்தது. ஆனால் இது திடீரென திசை மாறி இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடற்கரையை நோக்கி திரும்பும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

அப்போது மேலும் தீவிரமடைந்து அதிதீவிர புயலாக மாறி துவாரகா மற்றும் டையூ இடையே வருகிற 6-ந் தேதி நள்ளிரவு அல்லது 7-ந் தேதி அதிகாலையில் குஜராத்தில் கரையை கடக்கும். இதனால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ஜெயந்தா சர்க்கார் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...