???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகாமுனி : எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா?

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  02:54:05 IST


Andhimazhai Image

‘மௌனகுரு’ சாந்தகுமாரின் அடுத்த திரைப்படம், ஆர்யாவின் மாறுபட்ட தோற்றம், முன்னோட்ட காட்சிகள் என ‘மகாமுனி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் குவிய படம் நேற்று வெளியானது.

 

சிறைச்சாலையில் மன அழுத்தமுடைய கைதிகளின் நடுவே ஆர்யா இருக்கும் காட்சியிலிருந்து தொடங்குகிறது படம். தொடர்ந்து இருவிதமான ஆர்யாவின் கதை துண்டுதுண்டாக சொல்லப்படுகிறது. அரசியல்வாதி இளவரசுக்கு பகுதி நேரமாக கொலை, ஆள்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்து கொடுக்கும் ஆர்யா (மகா), கார் ஓட்டுநர் தொழில் செய்து மனைவி இந்துஜா, மகனுடன் வாழ்கிறார். மற்றொருபுரம், ஈரோடு மாவட்டத்தில் ஒரு மலையடிவார கிராமத்தில் தாய் ரோகிணியுடன் இருக்கும் ஆர்யா (முனி) இயற்கை விவசாயம், பள்ளிகள் எட்டாத மலைகிராமத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என மகிழ்வுடன் இருக்கும் காட்சிகள் வருகின்றன.

 

மனைவி இந்துஜா, மகனுடன் வாழும் மகாவுக்கு நெருக்கடி உருவாகிறது. அதிலிருந்து விடுபட்டு மனைவி, குழந்தையுடன் அமைதியான வாழ்க்கைக்கு செல்லும் முயற்சியோடு போராடுகிறார் மகா. புத்தக வாசிப்பு, விவேகானந்தர் வழியில் பிரம்மச்சரியம் என இருக்கும் முனிக்கு பணக்கார பெண் மஹிமா நம்பியாருடன் நட்புடன் பழகும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சாதிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்கிறார் முனி. இந்த இரண்டு ஆர்யாக்களின் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களா? ஒரே ஆர்யாவின் இருவித வாழ்க்கையா என்பது இரண்டாம் பாதியில் தெரிகிறது. பிறகு அவர்களது வாழ்க்கை எதிர்பாராத சம்பவங்களால் எப்படி திசை மாறியது என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொல்கிறது மகாமுனி.

 

பல காட்சிகளில் மஹிமா நம்பியார் இயல்பாகவே அசத்தியிருக்கிறார். இந்துஜாவின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது. இளவரசு, ஜி.எம். குமார், ஜெயக்குமார் என அனைவரது பாத்திரவார்ப்பிலும் சாந்தகுமாரின் உழைப்பு வெளிப்படுகிறது.

 

நகரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும், மனைவி குழந்தையுடன் வசிக்கும் ஆர்யாவின் வீட்டுக்குள் நிகழும் காட்சியின் ஒளியிலும், மலையடிவார கிராமத்தின் ரம்மியத்தை காட்டுவதிலும் ஒளிப்பதிவாளர் அருண் பத்பநாபனின் ஒளிப்பதிவு சிறப்பு. அதிலும் இயற்கை காட்சிகள் அதன் வசீகரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையில் ஈர்த்திருக்கிறார் தமன்.

 

சிக்கல்களும், பிரச்சனைகளும் பிணைந்த வாழ்க்கையிலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆர்யாவின் காட்சியோடு நிறைவுபெறும் மகாமுனி, திரில்லிங் அனுபவத்தோடு பலவிதமான மனித போராட்டங்களையும் உணர்த்தி நிறைவளிக்கிறது.

 

ஆர்யாவை நல்ல நடிகராக  மறுகண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கிறார் சாந்தகுமார். கதைக்களத்தில் பெரிய அளவில் புதுமை இல்லை என்றாலும் பேசப்பட்டிருக்கும் மனிதர்களின் வாழ்வு, கதாபத்திர வடிவம், சம்பவங்கள் போன்றவற்றில் புதுவாசம் தருகிறது இந்த படம். அரசியல்வாதிகளின் நலனுக்காக பணையம் வைக்கப்படும் சாமானியன் வாழ்க்கையை  சாந்தகுமார் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். அதேபோல் சாதிய பாகுபாட்டை, ஆணவ கொலை முயற்சியையும் இப்படம் நுட்பமாக சொல்லியிருக்கிறது.

 

இவற்றோடு சிந்திக்க தூண்டும் வசனங்கள் அவ்வப்போது இடம்பெற்று திரையரங்கில் ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றன. வித்தியாசமான கதைசொல்லல் முறையில் கதாபாத்திரத்தின் அசைவுகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் இயக்குநர் சாந்தகுமாரின் தனித்தன்மையும், மெனக்கெடலும் பளிச்சிடுகிறது.

 

-வசந்தன்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...