???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மெட்ராஸ் இயக்குநருக்கு சூர்யா கொடுத்த இன்பஅதிர்ச்சி.

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  00:43:26 IST

மெட்ராஸ் படத்தின் கதை திருடப்பட்டது என்பதை மீறி அந்தப்படத்தின் வெற்றியின் பலனை உடனடியாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ரஞ்சித். படம் வெளியாகி வெற்றியை மட்டுமின்றி பல தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்றுவிட்டது. பல ஊர்களிலும் இந்தப்படத்துக்காக பாராட்டுவிழாக்கள் நடக்கின்றன. அவற்றில் கலந்து கொண்டு மகிழ்கிறார் இயக்குநர் ரஞ்சித். அதற்கிடையில் அவரை அழைத்த சூர்யா, நான் நடிக்கிற மாதிரி ஒரு கதை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். ஓரிருநாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அவரிடம் கதை சொல்லத் தயாரானாராம் ரஞ்சித். சொன்னபடியே அவரைக் கூப்பிட்டு கதையைக் கேட்டிருக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் கதை சொல்லியிருக்கிறார் ரஞ்சித். அந்தக்கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

 

இந்தக்கதையாவது அவருடைய சொந்தக்கதையா என்று தெரியவில்லை. ஆனாலும் கதை பிடித்ததால், இந்தக்கதையை முழுமையாக்குங்கள், அதோடு திரைக்கதை வசனங்களையும் எழுதத் தொடங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குகிற மாதிரி தயாராகுங்கள் என்று இன்பஅதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சூர்யா இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவ்விரு படங்களின் வேலைகளும் அடுத்த ஜூன் மாதத்துக்குள் முடிவடைந்துவிடுமாம். எனவே ஜூலையில் ரஞ்சித் படத்தைத் தொடங்கிவிடலாம் என்று சொல்லியிருக்கிறாராம் சூர்யா. இந்தச் செய்தி ரஞ்சித்துக்கு இன்பஅதிர்ச்சி, விக்ரம்குமாருக்கு அடுத்து நாம்தான் என்று எண்ணிக்கொண்டிருந்த ஹரிக்குப் பேரரதிர்ச்சி என்றும் சொல்லப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...