???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய பிரதேசத்தில் வெடித்திருக்கும் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பெரும்புள்ளிகள்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   26 , 2019  06:12:45 IST


Andhimazhai Image
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்வாக்குமிக்க அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிக்கியிருக்கும் பாலியல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் பாலியல் தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் பணம் பறித்த கும்பலை இப்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
இந்த கும்பலை சேர்ந்த பெண்களிடம், அவர்களது பின்புலம் தெரியாமல் தொடர்பு வைத்திருந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதுதொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் 5 பெண்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முதலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று பெண்கள் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் குழுவாக சேர்ந்து  பெரிய அதிகாரிகள், அரசியல்வாதிகளை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அந்த நபர்களிடம் தங்களுக்கு இருந்த பாலியல் தொடர்பை, அவர்களுக்கு தெரியாமல் குறித்த பெண்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட காணொளி, புகைப்படத்தை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது.
 
இதில் சிக்கிய இந்தூர் மாநகராட்சி பொறியாளர் ஹர்பஜன் சிங் என்பவர் அளித்த புகாரில், பாலியல் காணொளிகளை வைத்து பணம் பறிக்கும் கும்பல் பிடிக்கப்பட்டிருக்கிறது. பிடிபட்டவர்களிடம் பல்வேறு உயர் அதிகாரிகளின் குரல் பதிவு கிளிப், புகைப்படங்கள், காணொளிகள் என 4000 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மீதான விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது. 
 
கைது செய்யப்பட்டிருக்கும் பெண்களுக்கு மூளையாக செயல்பட்டது யார், அரசின் உயர் அதிகாரிகள் பற்றிய தரவுகளை அவர்கள் எப்படி தயார் செய்தார்கள் என்கிற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள், பிரதான கட்சிகளின் பிரபல அரசியவாதிகள் இதில் சிக்கியிருப்பதால் அம்மாநிலத்தில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...