???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   16 , 2019  23:02:24 IST

15 ஆண்டுகளுக்கு பின்னர் மாதவனும் - சிம்ரனும் ஜோடி சேர்ந்துள்ளனர். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் கதாநாயகனாக மாதவன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற விவரங்கள் வெளியாகாத தற்போது சிம்ரன்தான் மாதவனுக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக மாதவன் - சிம்ரன் ஜோடி 2001-ல் வெளியான கே. பாலச்சந்திரனின் பார்த்தாலே பரவசம், 2002-ல் வெளியான மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

ட்ரி கலர் ஃபிலிம்ஸ் சார்பாக மாதவனின் இயக்கத்தில் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் விண்வெளி பொறியாளராக மாதவன் நடிக்கிறார். படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் நம்பி நாராயணனும் ஒருவர். அவர் கடந்த 1994-ல் அரசின் ரகசிய தகவல்களை வெளிநாட்டிற்கு அளித்தார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையில் அவர் குற்றமற்றவர் என தெரியவந்தது. கடந்த 2019-ல் நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...