அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’மாறா’ திரைப்பார்வை

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   09 , 2021  15:00:38 IST


Andhimazhai Image

ஒரு கதை, இரண்டு காதல் ஜோடிகள் சேர்வதற்கு காரணமாக அமைகிறது. 50 வருடங்களுக்கு முன்னால் பிரிந்த வெள்ளையனும், மீனாட்சியும் தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கதையை படத்தின் நாயகனுக்கும், நாயகிக்கும் சொல்கின்றனர். அந்த கதை எப்படி காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறது என்பதே மாறா படத்தின் கதை.

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காக மாறா படம் வெளியாகியுள்ளது.

கதாநாயகி பாரு, தான் சிறுவயதில் கேட்ட தனக்கு மட்டுமே தெரிந்த கதையை சுவர்களில் சித்திரமாக பார்ப்பதில் தொடங்குகிறது படத்தின் கதை. அந்த கதையை சித்திரமாக வரைந்த ‘மாறா’வைத் தேடும் பயணத்தில் அவன் மீது காதல் கொள்கிறாள் பாரு. ‘மாறா’ ஒரு ஓவியன். அவன் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களின் வழியே புதிய கதாபாத்திரங்களும், அந்த கதாபாத்திரங்களுக்கான சிறுகதைகளும் ‘மாறா’ எப்படிப்பட்டவன் என்ற விவரங்களை விவரித்து செல்கிறது.

திருடனாக வரும் அலெக்ஸாண்டர் பாபுவின் காமெடி சிரிக்க வைக்கிறது. முதல் படத்தில் அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தான். செல்வி, டேவிட், ராணி, கனி, சொக்கு என கதாபாத்திரங்கள் படத்தின் முதல் பாதியை வேகமாக நகர்த்தி செல்கின்றனர்.

மாறாவாக மாதவனும், பாருவாக ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் அழகாக பொருந்தியுள்ளனர். கமர்ஷியல் படத்தில் வருவது போல் வழக்கமான சண்டை காட்சிகளில் ஹீரோயிஸத்தை காட்டாமல், கதாநாயகனை பற்றி பிறர் கூறும் நல்ல விஷயங்களில் ஹீரோயிஸத்தை காட்டியிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் ரசிக்க வைக்கிறது.

படத்தை உயிர்ப்போடு காட்டியதில் நடிகர்களை தாண்டி, ஒளிப்பதிவாளருக்கும், இசையமைப்பாளருக்கும் பெரிய பங்கு உண்டு. படத்திற்கான கலர் டோன், ஃப்ரேம் எல்லாமே கட்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வண்ணங்களால் நிறைந்த வீதியிலும், மாறாவின் வீட்டிலும்  கலை இயக்குனர் அஜயனின் பணி கைத்தட்டல்களை பெறுகிறது.

படத்தின் இரண்டாம் பாதி மெதுவாக நகர்ந்தாலும், பார்வையாளர்களுக்கு எந்த ஒரு அயர்ச்சியையும் தராத வண்ணம் திரைக்கதை பலமாக உள்ளது.

இயக்குனர் தினேஷ் கிருஷ்ணன் சார்லி படத்தை அப்படியே எடுக்காமல், திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். ‘மாறா’ திரைப்படம் ‘சார்லி’ படத்தை பார்த்தவர்களையும் ரசிக்க வைக்கும்.


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...