அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   25 , 2021  08:32:44 IST

தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 
 
இதற்கிடையில் திடீரென நேற்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்தார்.
 
இதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே காத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் காலை 5 மணிக்கு வெளியாகும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்குகளின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், காலை 6.45 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...