???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அன்பினால் இயங்குகிறது உலகம் - எழுத்துலகில் ஐம்பதாண்டு நிகழ்ச்சியில் மாலன்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   03 , 2019  04:59:37 IST


Andhimazhai Image
மாலன் எழுத்துலகில் ஐம்பதாண்டு நிகழ்ச்சி சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. அந்திமழை இதழின் கலைஞன் போற்றுதும் நிகழ்வின் ஓர் அங்கமான இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
 
எழுத்தாளர் சிவசங்கரி, மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன், இயக்குநர் வசந்த் எஸ் சாய், அந்திமழை இளங்கோவன், பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ’மாலன் நேர்காணல்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுமைகள் அனைவரும் உரையாற்ற, இறுதியாக மாலன் ஏற்புரை வழங்கினார்.
 
நிகழ்ச்சியில் உரையாற்றிய அனைவரும் மாலன் அவர்களுடனான் தமது பயணத்தையும் அனுபவத்தையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டனர். புதிய இளம் பத்திரியாளர்களை மாலன் எவ்வாறு செழுமைப்படுத்தினார், அவர்களுக்குரிய சுதந்திரத்தை வழங்கி எப்படி திறமையை வெளிக்கொண்டுவந்தார் என உரையாற்றிய ஆளுமைகள் எடுத்துரைத்தார்கள். மாலன் தன் இதழியல் அனுபவத்தை இளைய தலைமுறைக்குக் கடத்த ஊடக நிறுவனம் ஒன்றைத் தொடங்கிச் செயல்படவேண்டும் என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தன் உரையில் குறிப்பிட்டார்.
 
எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக தனக்கு நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் மாலன் திகழ்ந்ததாக கூறினார். 
 
மாலன் எதனை நேர்மை என கருதினாரோ அதற்காக இறுதிவரை உண்மையாக நின்றார். இனியும் அப்படியே இருப்பார் என்பது அவரது தனிச்சிறப்பு என இயக்குநர் வசந்த் கூறினார்.
 
 
பின்னர் தமது பதிப்பாளர்களுக்கு சிறப்பு செய்தபின்பு மாலன் ஏற்புரை வழங்கினார். அவர் பேசுகையில், 'எந்த இடத்தையும் அடைய அல்ல சும்மா நடக்கவே விரும்புகிறேன்' என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த வாசகம் தான் என் வாழ்க்கையின் மொத்த சாரம்சமாக இருக்கிறது. புதிய இளைஞர்கள் எழுத்தின்மீது ஆர்வம்கொண்டு ஒருநிலைபாட்டை எடுத்து எழுதுவதை ஊக்குவிக்க வேண்டுமென்பது என் எண்ணம். தொடக்க காலத்தில் அந்திமழை கையெழுத்து பிரதியாக வந்தபோது இவ்வாறு தான் அதனை நான் ஆதரித்தேன். இந்த நிகழ்ச்சியிலும் அந்திமழை நண்பர்களது உழைப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது.
 
என் வாழ்வின் பல்வேறு தருணங்கள் அன்பினால் கட்டபட்ட மனிதர்களால் நிறைந்திருக்கிறது. நான் பணியாற்றிய பத்திரிகைகள் ஒவ்வொன்றிலும் பல புதிய முயற்சிகளை நாங்கள் செய்திருக்கிறோம். தமிழ் இதழியலின் புதிய எல்லைகளை கண்டையும் ஆர்வம் எங்களை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தது. தமிழ் இதழியலின் இந்த எல்லைகளை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். நீங்கள் ஏன் தொடர்ந்து புனைவிலக்கியத்தை எழுதவில்லை என பலரும் கேட்டார்கள். புனைவில் நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒரு உண்மையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிவிட முடியும். ஆனால், இதழயலில் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். அதன் மொழியிலும் நடையிலும் பல்வேறு புதிய முயற்சிகள் இடம்பெறவேண்டும். இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் வெளிப்படுத்தியிருக்கும் அன்பு எனக்கு ஒன்றை உணர்த்துகிறது. அன்பினால் இயங்குகிறது உலகம் என்கிற நம்பிக்கை எனக்கு இன்று இன்னும் அதிகமாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நான் அப்படிதான் பார்க்கிறேன்,” என்றார் அவர்.
 
நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், லேனா தமிழ்வாணன், ஓவியர் மணியம் செல்வன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இரா.முருகன், மணா, பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்ந்துகொண்டு சிறப்பித்தார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...