அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   04 , 2020  12:18:09 IST


Andhimazhai Image
 
 
தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க திமுக பங்காற்றவில்லை. தேசியக் கட்சிகளின் பங்களிப்புதான் பெரிது என்று சிலர் ஒரு புனைவை முன்வைப்பதைக் காணமுடிகிறது.
 
 
1967-ல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் திமுக, அஇஅதிமுக கட்சிகளின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் திமுக ஆட்சி 21 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி 30 ஆண்டு காலமும் நடைபெற்றுள்ளது. திமு கழகம் ஆண்ட 21 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி;  மீதி 19 ஆண்டுகளும் கலைஞரின் ஆட்சி. அப்போது தமிழகம் கண்ட வளர்ச்சியின் சுருக்கமான விளக்கம் தான் இக்கட்டுரை. இதுவே அந்த புனைவை தகர்த்தெறியப் போதுமானது.
 
 
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த கலைஞர் அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம்  தமிழகத்தின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக திட்டமிட்டு செதுக்கினார். 
 
 
கல்வி வளர்ச்சியில் காமராசரின் கனவான 3 கிமீக்கு ஒரு தொடக்கப்பள்ளி; 5 கிமீக்கு  ஒரு நடுநிலைப்பள்ளி 10 கிமீக்குள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் என்ற இலக்கை கிட்டத்தட்ட எட்டி முடித்தவர் கலைஞர். பள்ளி இறுதிவரை இலவச கல்வி;  சத்துணவில் வாரம் 5 முட்டை;  இலவச பஸ் பாஸ் ஆகியவை தமிழக கல்வி வளர்ச்சியின் அடிக்கற்கள். பள்ளிக்கல்வியில் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார். ஆசிரியர்களுக்கு  அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கினார்.
 
 
குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பொறியியல் கல்விக் கட்டண உதவி; மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடங்களை வருவோர்க்கு மேற்படிப்பு உதவித்தொகை போன்றவை கல்வி வளர்ச்சிக்கு உதவின. இந்தியாவில் முதல் வேளாண் பல்கலைக்கழகம், ஆசியாவிலேயே முதல் கால்நடை பல்கலைக்கழகம், சென்னையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதிதாசனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ் இணைய பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைத்ததுடன் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைத்ததால் உயர்கல்வியில் தமிழகம் உயர்ந்து நின்றது. உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார்.
 
 
படிப்பை முடித்து வருவோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிட சென்னையில் டைடல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினார். அதன் வாயிலாக சென்னையை பெங்களூர், ஹைதராபாத், தில்லி, மும்பை போன்று தொழில்நுட்ப கேந்திரம் ஆக்கியது அவரது ஆட்சிக்காலத்தில்தான். திருப்பெரும்புதூர் தொடங்கி காஞ்சிபுரத்திற்கு செல்லும் வழியெல்லாம் சாலையின் இரு மருங்கிலும் பார்ப்பவர்கள் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரியும். ஹூண்டாய் கார் தொழிற்சாலை, செயின்கோபின் கண்ணாடித் தொழிற்சாலை, நோக்கியா, மோட்டோரோலா, ஃபாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலைகள், டெல் கம்ப்யூட்டர், தொழிற்சாலை, சாம்சங் டிவி வாஷிங் மெஷின் தொழிற்சாலை, பிலக்ஸ்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, கொமாட்சு தொழிற்சாலை, தேசிய வாகனபரிசோதனை நிலையம், நிஷான் கார்தொழிற்சாலை, அப்போலோ டயர் தொழிற்சாலை என்று எண்ணற்ற தொழிற்சாலைகளைக் காணலாம். இவற்றைச் சுற்றிலும் சிறுகுறு நடுத்தர துணை பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெருகின. தொழில்துறைக்கு நவீன காலத்தில் திமுக ஆட்சி அளித்த முக்கியப் பங்களிப்பு மேற்சொன்னதுதான்! 
 
 
பெண் கல்வியை ஊக்குவிக்க, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் ரூ.5000, பத்தாம் வகுப்பு படித்திருந்தால் ரூ 10,000 வழங்கினார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கினார்.
சுகாதாரத்துறையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான மருத்துவமனைகள், மாவட்ட அளவிலான மருத்துவ மனைகள் என்று மருத்துவ கட்டமைப்புகளை பெருக்கி அதன் மூலம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதி கொண்ட மாநிலம் என்று நிரூபித்தார். மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரி என்பது கலைஞரின் மகத்தான திட்டம். உள்ளடங்கிய கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியாற்ற அவர்களின் மேற்படிப்பிற்கு சலுகைகளை வழங்கியதால் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிற்றூர்களிலும் மருத்துவ வசதி கிட்டியது. இன்று கொரோனா பெருந்தொற்றை தமிழ்நாடு எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பது, சுகாதாரத் துறைக் கட்டமைப்புகளின் தோள் மீதேறி நின்றுதான்..
 
 
ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர்களுக்கும் சாலை வசதி. சிற்றூர் மற்றும் நகர்ப்புறங்களில் வீதிகளை கான்கிரீட் சாலைகளாக அமைத்தது, மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆக தரம் உயர்த்தி, 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்க காரணமாக இருந்தது என பட்டியல் நீளமானது.
 
 
சென்னையில் சிறப்பு மிக்க கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேம்பாலம், தாம்பரம் மதுரவாயில் பறக்கும் சாலை, போன்றவை திமுக ஆட்சியில்தான் உருவாகின.  இவையன்றி 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் சென்னையில் உருவாக்கினார்.
சென்னையைச் சுற்றி 200 அடி வெளிவட்ட சாலை அமைந்தது. ஜப்பான் நாட்டு வங்கி உதவி பெற்று மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரப்பட்டது.
இப்போதுதான் இந்திய பிரதமர் மோடி அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி என்று திட்டம் தீட்டுகிறார் ஆனால் கலைஞர் அதை அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடத்திக் காட்டிவிட்டார். தமிழக மின் திட்டங்களில் நெய்வேலி இரண்டாம் அலகு மின் திட்டம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம், காடம்பாறை நீர் மின் நிலையம் போன்றவற்றை அமைத்ததுடன் காற்றாலை மின் திட்டத்தை தொடங்கி வைத்ததும் கலைஞர் தான். 
 
 
தமிழ்நாடு தொழில் துறையின் வளர்ச்சி காண சிப்காட், எல்காட், சிட்கோ, டான்சி, டிக், டாமின், டாஸ்மாக், போன்ற பல நிறுவனங்கள் அமைத்ததுடன் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை ஐந்து மண்டலங்களில் அமைத்தது திமுக ஆட்சிதான். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி அந்த காலத்திலேயே சேரன் சோழன் போக்குவரத்து கழகங்களை உருவாக்கிய பெருமையும் கலைஞரை மட்டுமே சாரும். ஆனால் இன்னமும் உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தில் பெருக்கிய பெருமையை திமுகவுக்குத் தர மறுப்பவர்களை என்னவென்று சொல்ல?
 
(கட்டுரையாளர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர், திமுக. அந்திமழை ஜூலை2020 இதழில் வெளியான கட்டுரை)

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...