???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மா.அரங்கநாதன் இலக்கிய விருது!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   16 , 2018  05:12:31 IST


Andhimazhai Image

கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமாகிய ரவி சுப்பிரமணியனுக்கும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான எஸ். சண்முகத்துக்கும் 2017ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இரண்டு விருதுகளும் தலா ஒரு லட்சம் ரொக்கப்பரிசும், மா.அரங்கநாதனின் சிறு உருவச் சிற்பம் ஒன்றும் நினைவுப் பரிசாக வழங்கப்படும்.  தமிழின் தனித்துவம் மிக்க மூத்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவை ஒட்டி இனி ஆண்டு தோறும் அவரது நினைவு நாளான ஏப்ரல் 16ஆம் தேதியன்று மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை மா.அரங்கநாதனின் மகன் நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மியூசிக் அகாடமி அரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது. தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞரான ரவி சுப்பிரமணியன் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஒப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு, விதானத்து சித்திரங்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், கல்யாண்ஜியின் கடிதத் தொகுப்பு ஒன்றும், ஆளுமைகள் தருணங்கள் என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. மேலும் தமிழின் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகள் குறித்த இவரது ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.சண்முகம் விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். கதை மொழி என்னும் விமர்சனக் கட்டுரைத் தொகுப்பும், சமன்குலைக்கும் ராக் இசை என்னும் இசை பற்றிய கட்டுரைத் தொகுப்பும், பழைய கதவு என்னும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. 250 பிற மொழிக் கவிதைகள் இவரது மொழிபெயர்ப்பில் துயிலின் இரு நிறங்கள் என்ற தலைப்பில் சென்ற வருடம் தொகுப்பாக வெளிவந்தது. பரவலான வாசக வரவேற்பையும் விமர்சன வீச்சுக்களையும் பெற்ற தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...