அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   30 , 2020  12:03:48 IST

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த தன்னை மிரட்டல் விடுக்கும் வகையில் காவல்துறையினர் பேசியதாக மாஜிஸ்திரேட்டு மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,  புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன்  இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி, தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர்  விசாரணைக்கு ஆஜர் ஆகினர். அதேபோல், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் ஆஜரானார்.மிரட்டல் புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நேரில் ஆஜர் ஆனார்.  

இந்த வழக்கு விசாரணையின் போது, “ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...