???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் :

Posted : புதன்கிழமை,   ஜுலை   26 , 2017  10:50:21 IST


Andhimazhai Image

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 2009க்கு பிறகு எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதற்கு மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர்  வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமின்றி, இந்த தடை நீக்கம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே கருதுகிறேன்.

 

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து முடக்கி வரும் இலங்கை அரசு இந்த தடை நீக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

 

ஐரோப்பிய யூனியனே தடையை நீக்கியிருக்கின்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தமிழரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தருணம் இது என தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அமைப்பு போராளிகள் இயக்கம் தான் என்றும் அது ஒன்றும் பயங்கரவாத அமைப்பு கிடையாது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...