அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

லாட்டரி சீட்: ரூ.7 கோடியை உரியவரிடம் ஒப்படைத்த இந்தியக் குடும்பம்!

Posted : வியாழக்கிழமை,   மே   27 , 2021  12:40:04 IST


Andhimazhai Image

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் லாட்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம். கடையின் உரிமையாளர் மகனான அபி ஷா, பெடரல் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று, குப்பைத் தொட்டியில் முழுமையாக சுரண்டப்படாமல் இருந்த லாட்டரி சீட்டை எடுத்து முழுமையாக  சிராய்த்துப் பார்த்துள்ளார். அதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளதை அறிந்தார். அது இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாய். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அபி, தனது பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு அவரின் பெற்றோர் இது நமக்கு விழுந்தது கிடையாது  என மறுத்துள்ளனர். இந்த தொகை, மதிய உணவு இடைவெளியில், தங்களுடைய கடைக்கு வந்து லாட்டரி சீட் வாங்கும் லியா ரோசா ஃபைகா என்பவருடையதாக இருக்கும் என்று அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.


இவ்வளவு பெரிய பரிசுத் தொகை அந்த லாட்டரி சீட்டுக்குக் கிடைத்தும், அதை தாங்களே வைத்துக்கொள்ளாமல் தங்கள் கடையின் வாடிக்கையாளரான ஃபைகாவை தேடிப்பிடித்து அவரிடம் அதை ஒப்படைத்துள்ளனர். முன்னதாக ஃபைகாவை இரண்டு நாட்களாகத் தேடியுள்ளனர் ஷா குடும்பத்தினர். அந்த இரண்டு நாட்களும் அவர்கள் தூக்கமில்லாமல் தவித்துள்ளனர்.


இது தொடர்பாக அபி கூறுகையில், “பலபேர் தங்கள் வாழ்க்கை முழுவதும் லாட்டரி சீட் வாங்கி பணம் வென்றது கிடையாது. சரியாக சிராய்க்கப்படாமல் குப்பையில் கிடந்த ஒரு சீட் மூலமாகத்தான் நான் இவ்வளவு பெரிய தொகையை வென்றேன். நாங்கள் அதை வைத்துக்கொண்டு இரண்டு இரவுகள் தூங்கவில்லை.” என்றார்.


இது தொடர்பாக ஃபைகா கூறுகையில், “அன்று நான் ஒரு அவசரத்திலிருந்தேன், மதிய உணவு இடைவேளையில் இந்த லாட்டரியை வாங்கிச் சுரண்டினேன். பாதி மட்டுமே சுரண்டிய நிலையில் அதிலிருந்து எண் பரிசு வெல்லாது என நினைத்து, பணிக்கு செல்லும் அவசரத்தில் அப்படியே கீழே போட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் அதனை கடையின் உரிமையாளர்கள் கொண்டுவந்து சேர்த்தனர். அந்த தருணத்தில் அந்த சந்தோஷத்தை நினைத்து என்னை அறியாமல் அழுதேன், நான் அவர்களை அணைத்துக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.


அபி ஷாவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சூரத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. அபியின் பெற்றோர் மதுபானம், மளிகை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளனர். அவரது மனைவி மத்திய அரசுப் பணியிலும் உள்ளார்.


இந்தியக் குடும்பம் நடத்தி வரும் கடையின் பெயர் லக்கி ஸ்பாட் ஆகும். கடைக்கு லாட்டரி சீட் வாங்க வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அருணாவையே சீட்டை தேர்ந்து கொடுக்கச் சொல்வார்களாம். ஏனெனில் அவரின் கையால் லாட்டரி சீட்டைப் பெற்ற வாடிக்கையாளர் ஒருவர்  7,26,700 ரூபாய் வென்றுள்ளார் என்பதால்.


இவ்வளவு பெரிய தொகை கிடைத்தும் அவற்றை தாங்களே வைத்துக் கொள்ளாமல் அவற்றை உரியவரிடம் ஒப்படைத்த இந்திய வம்சாவளி குடும்பத்தினருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...