???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை டிசம்பர் 14 வரை ஒத்திவைப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   09 , 2016  02:44:48 IST

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்ட தொடர் அமளியால் மக்களவை டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய போது, ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 11.30 மணிக்கு அவை கூடிய போதும் அமளியை எதிர்க்கட்சிகள் கைவிடாததால் மக்களவை 12 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய போதும் அமளி நீடித்ததால் மக்களவை டிசம்பர் 14-ஆம் தேதி அதாவது வருகின்ற புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
அதேபோல் மாநிலங்களவை காலை கூடிய போதும், எதிர்க்கட்சிகள் பண மதிப்பிழப்பு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. அவைத் தலைவர் இருக்கை அருகே எழுந்த நின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலின் ஈடுபட்டனர். அப்போது பேசிய பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமளி நீடித்ததால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போதும் அமளி நீடிப்பால் மாநிலங்களவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...