அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! 0 மூன்றாவது டி20: 81 ரன்களில் சுருண்ட இந்தியா! 0 பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 0 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! 0 மூன்றாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! 0 பயிர்க்காப்பீட்டு கட்டணம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! 0 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்! 0 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி! 0 உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம் 0 சர்வதேச புலிகள் தினம்: கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முழு பொதுமுடக்கம்: கடைக்குப் போகணுமா? நடந்துபோங்க! சென்னை காவல்துறை அறிவிப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   18 , 2020  15:38:37 IST


Andhimazhai Image

 

 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

 

21 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற கடைகள் மற்றும் வாகனங்கள் எதற்கும் அனுமதியில்லை எனப்பட்டுள்ளது. அதேசமயம் அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இ-பாஸ் வைத்திருப்பவர்கள் அதை பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்கு தெரியும்படி காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. போலியான இ-பாஸ் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்லும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்தவித அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...