???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  23:26:01 IST

தமிழகத்தில் கிராம அளவில் மட்டும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்ட பகுதிகளில் கிராம அளவில் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வருமாறு நேற்று மாலை திடீரென்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.டி.ராகவன், பா.ம.க. சார்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, த.மா.கா. சார்பில் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பொருளாளர் கோவை தங்கம், தே.மு.தி.க. சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...