???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவது சாத்தியமில்லை: மாநில தேர்தல் ஆணையம்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  23:58:05 IST

வார்டுகள் மறுவரையறைச் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவது சாத்தியமில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் உள்ளாட்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதன் மூலம்  உள்ளாட்சித் தேர்தலை  நடத்தும் விருப்பம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெரியவருவதாகக் 
குற்றம்சாட்டியுள்ளார். 
 
இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் கே.கே.ரமேஷ் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் பதில்மனு தாக்கல் செய்தார். 
 
அதில் வார்டு மறுவரையறை தொடர்பாக குழு அமைத்து பணிகள் நடந்து வரும் வேலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாரர் கோருவதை ஏற்பது இயலாத காரியம் என கூறப்பட்டது. 
 
இதையடுத்து  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவ்வழக்கு குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...